குலுக்கலில் சின்னம் பெற்ற வேட்பாளர் ஆரவாரம்! அங்கீகார கட்சியினர் கடும் அதிருப்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
23:50


காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு நேற்று நடந்தது. இதில் சின்னம் பெற்ற மகிழ்ச்சியில் வேட்பாளர்கள் ஆரவாரம் செய்தனர்.



காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் 15ல் துவங்கி, 22ல் நிறைவு பெற்றது.மனுக்கள் மீதான பரிசீலனை 23ல் நடந்தது. நேற்று மாலை, 3:00 மணி வரை மனுக்கள் 'வாபஸ்' பெறப்பட்டதை தொடர்ந்து, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.முன்னதாக உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளி இல்லாமல், வேட்பாளர்கள் 'சேர்'களில் அமரவைக்கப்பட்டனர்.சின்னம் ஒதுக்கீடு செய்வதற்காக, மாவட்டம், ஒன்றியம் மற்றும் ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான வேட்பாளர்களை வரிசை முறைப்படி மைக்கில் அழைத்து, அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அனுப்பப்பட்டனர்.



அங்கு வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் பூட்டு சாவி, ஆட்டோ ரிக் ஷா, கை உருளை, ஏணி என வரிசைப்படி சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான படிவத்தில் வேட்பாளரின் சின்னம் ஒட்டப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டது.ஒரே நேரத்தில்வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், மதியம் 3:00 மணிக்கு தேர்தல் அலுவலர்கள் வேட்பாளர்களை வரவழைத்தனர். அனைவரும் ஒரே நேரத்தில் கூட்டமாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் குவிந்தனர்.குலுக்கலில் முதல் பெயர் வந்தவருக்கு பூட்டு, சாவி சின்னம் மற்றும் இரண்டாவது பெயர் வந்தவருக்கு, ஆட்டோ ரிக் ஷா சின்னமும் வந்தன.இதில், பூட்டு சாவி சின்னம் கிடைத்த ஊராட்சி தலைவர் வேட்பாளர்களுக்கு, 'ஜாக்பாட் அடித்தது போல ஆரவாரம் செய்தனர்.வேட்பு மனு தாக்கல் செய்த நேரத்தில் இருந்த போலீசார், நேற்று நடந்த குலுக்கலுக்கு இல்லை. இதனால், கூட்ட அரங்கம் முழுதும் மக்கள் நிரம்பி வழிந்தனர்.ஊராட்சி தலைவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட, 73 ஊராட்சிகள், 13 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது.



வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அறைகளில், பிரச்னை எதுவும் ஏற்படாமல் இருக்க, காஞ்சிபுரம் நில அபகரிப்பு பிரிவு, போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில், உத்திரமேரூர் சப் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ரவி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு ஒன்றியங்களில் ஊராட்சி தலைவர் பதவிக்கு, 2,010 பேர் போட்டியிடுகின்றனர்.இந்த வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நேற்று நடந்தது.காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வேட்பாளர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல், கூட்டமாக நின்றிருந்தனர். இதை அங்கிருந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 10:00 - மாலை 3:00 மணி வரை, வேட்பு மனுவை திரும்ப பெற்றனர்.போலீசார், வேட்பாளர்களை மட்டும் அனுமதித்து, 3:00 மணி கடந்து, அறையில் கூடியிருந்தவர்களை வெளியேற்றினர்.விபரம்மாலை 3:30 மணிக்கு பின், மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள், ஊராட்சி தலைவர் பதவி வேட்பாளர்கள் ஆகியோரை போலீசார், படிப்படியாக அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.



மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், அரசியல் கட்சிகள், சுயேச்சை ஆகிய வேட்பாளர்களுக்கு, தேர்தலில் போட்டியிடுவோர் விபரம் குறித்து தெரிவிக்கப்பட்டது. வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க நீண்ட நேரமானதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.தேர்தல் பார்வையாளர் ஆய்வுகுன்றத்துார் ஒன்றியத்தில் மூன்று மாவட்ட கவுன்சிலர்கள், 21 ஒன்றிய கவுன்சிலர்கள், 42 ஊராட்சி தலைவர்களுக்கான உள்ளாட்சி தேர்தல், இரண்டாம் கட்டமாக அக்., 9ம் தேதி நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் ஓட்டுச்சாவடி பெட்டிகள், படப்பையில் உள்ள குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர் அமுதவல்லி, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.வித்தியாச வேட்பாளர்கள்உத்திரமேரூர் ஒன்றியம், ஆறாவது மண்டலத்திற்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வனிதா, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னம் பொறித்த துண்டு சீட்டை நாஞ்சிபுரம் ஊராட்சி வேட்பாளர் கலையரசியிடம வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட வேட்பாளர் கலையரசி, அந்த சின்னத்தை பயபக்தியுடன் கன்னத்தில் ஒத்திக்கொண்டார்.சாலவாக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு சீனிவாசன், பெண் வேட்பாளர் சத்யா ஆகிய இருவர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.



இருவருக்கும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட சின்னம் வழங்கப்பட்டது.சின்னத்தை பெற்றுக்கொண்ட இரு வேட்பாளர்களும், நேருக்கு நேர் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது இருவரும், கைகூப்பி வணக்கம் செலுத்தி, நலம் விசாரித்துக்கொண்டனர்.இருவருக்கும் பலத்த போட்டி இருந்தாலும், எதிரியைப்போல பார்க்காமல் இருவரும் வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்துக் கொண்டது, ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என, அங்கிருந்த பிற ஊராட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.அகரவரிசைப்படி வேட்பாளர் பெயர்காஞ்சிபுரம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு, அரசியல் கட்சி அல்லாத தனி சின்னங்கள் வழங்கப்பட்டன. ஒன்றியக் குழு கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு, அரசியல் கட்சிகளின் சின்னம் வழங்கப்படுகிறது.இந்த இரு பதவிகளுக்கும் நேற்று சின்னம் ஒதுக்கும்போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் முதலிடத்திலும், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் சின்னங்கள் அதற்கடுத்த இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் சின்னங்கள் கடைசியாக ஒதுக்க வேண்டும் என, அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.



தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமும், குன்றத்துாருக்கு வந்த தேர்தல் பார்வையாளர் அமுதவல்லியிடமும் கட்சியினர் முறையிட்டனர். சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் அதுபோன்ற முறையே பின்பற்றுவதாக கட்சியினர் கூறினர். ஆனால், உள்ளாட்சி தேர்தலில் அதுபோன்ற நடைமுறை இல்லை என, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.அனைத்து வேட்பாளர்களும், அகர வரிசைப்படியே ஓட்டுச்சீட்டில் இடம் பெறுவர் என தேர்தல் அதிகாரிகள் கூறினர். இதனால், அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் பெயர், ஓட்டுச்சீட்டில் கீழும், சுயேச்சை வேட்பாளர் பெயர் மேலும் இடம் பெற வாய்ப்புள்ளது. இதனால், அரசியல் கட்சியினர், 'அப்செட்' ஆகினர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X