துாரிகையில் உயிர் பெறும் ஓவியம்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
23:51

அபார திறமையும், முறையான பயிற்சியும் இருந்தால் மட்டுமே ஓவியம் வரைய துாரிகை வசப்படும். அதிலும் உயிரோட்டத்தை கொண்டு வருபவனே உண்மையான படைப்பாளி. இப்படியான இளம் படைப்பாளிகளை கண்டெடுத்துள்ளது, திருப்பூரில் இயங்கும் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.சமீபத்தில் சேலம் ஏ.சி.எம்.ஜி., ஆர்ட் ஸ்டுடியோ நடத்திய மாநில அளவிலான ஓவிய போட்டியில் பங்கேற்றதன் மூலம் இப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர் சஞ்சய் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இவர் அச்சுபிசகாமல் வரைந்த விநாயகர் படம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.ஓவியம் வரைவது குறித்து சஞ்சயிடம் பேசினோம்...அப்பா உதய்குமார், அம்மா பார்வதி இருவரும் பனியன் கம்பெனியில் டெய்லர். ஐந்து வயதில் இருந்து வரைய பிடிக்கும். எனது ஆர்வத்தை பார்த்து அப்பா ஓவிய வகுப்பில் சேர்த்து விட்டார். இரு ஆண்டுகளாக பயிற்சி எடுக்கிறேன். ஊரடங்கில் நிறைய படங்கள் வரைய நேரம் கிடைத்தது. இணையத்தில் இருந்து சாமி படங்கள், காந்தி, அப்துல்கலாம், விளையாட்டு வீரர்கள், என நுாற்றுக்கணக்கான படங்களை பார்த்து அப்படியே தத்ரூபமாக வரைவேன்.இதற்கு தேவையான ஆயில், அக்ரலிக், வாட்டர் கலர், கிரையான்ஸ், பிரஷ்கள், டிராயிங் போர்டு உபகரணங்கள் அனைத்தும் அப்பா வாங்கி தந்துள்ளார். சிறு நுணுக்கத்தையும் அலட்சியமாக விடமாட்டேன். சேலத்தில் நடந்த போட்டியில், 300 மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் விநாயகர் படத்தை அக்ரலிக் பெயின்டிங்கில், மூன்று மணி நேரம் வரைந்தேன். இந்த ஓவியம் முதல் பரிசை பெற்றது. பெற்றோர் முன்னிலையில், பதக்கம் வாங்கியது மகிழ்ச்சி, என்று சொன்ன மாணவரை, பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி, செயலாளர், கீர்த்திகா வாணி, பொருளாளர் ஸ்ருதி, பள்ளி முதல்வர் மணிமலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, பரிசு வழங்கினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X