பள்ளி, கல்லூரி செய்திகள் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
பள்ளி, கல்லூரி செய்திகள்
Added : செப் 25, 2021 | |
Advertisement
 

வகுப்பறை கட்டட திறப்பு விழாவிருதுநகர்: செந்திக்குமார நாடார் கல்லுாரியில் புதிய ஐந்து வகுப்பறைகள் கட்டட திறப்பு விழா நடந்தது. துவக்க விழாவில் முதல்வர் சுந்தரபாண்டியன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் வன்னியானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார், நிர்வாகிகள் ராதிகா வன்னியானந்தம், மீனாகுமாரி, சாந்திமுத்து குத்துவிளக்கேற்றினர். பொருளாளர் முத்து நினைவு பரிசு வழங்கினார். தஞ்சாவூர் நில அபகரிப்பு, தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., அருணாச்சலம் வகுப்பறைகளை திறந்து வைத்தார். சுயநிதி பாட பிரிவு ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஜெயக்குமரன், செல்வசங்கரன், ஷோபனா தேவி, லாரன்ஸ் செய்திருந்தனர்.சர்வதேச போட்டியில் சாதனைவிருதுநகர்: சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் 65 கிலோ எடை பிரிவில் நட்சத்திர ஆகாஷ் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். 38 கிலோ எடை பிரிவில் ஹரிபிரசாத் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். இம்மாணவர்களை கல்லுாரி தலைவர் வன்னியானந்தம், உப தலைவர் சந்திரசேகரன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் முத்து, முதல்வர் சுந்தரபாண்டியன், சுயநிதி பாட பிரிவு ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், உடற்கல்வி துறை இயக்குனர் முருகேசன், உடற்கல்வி துறை தலைவர் குழந்தைவேலு பாராட்டினர்.விருதுகள் வழங்கும் விழாவிருதுநகர்: வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் விருது வழங்கும் விழா நடந்தது. செயலாளர் ரவிசேகர் வரவேற்றார். கல்லுாரி நிர்வாக குழு தலைவர் மகேஷ்பாபு, செயலாளர் ரவிசேகர், பொருளாளர் இன்பசேகரன் பேசினர். முதல்வர் மீனா ராணி ஆண்டறிக்கை வாசித்தார். மதுரை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் பொன்முத்துராமலிங்கம், இதயம் நிறுவன உரிமையாளர் முத்து ,மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், விருதுகள் வழங்கி பேசினர். 2020--21ம் ஆண்டுக்கான சிறந்த மாணவியை நன்கொடையாளர் ஸ்வாதி விக்னேஷ்வரி கவுரவித்தார். மாணவி மகாஸ்ரீ நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X