அழகோடு அறிவூட்டல்; சலூன் கடையில் ஓர் நூலகம் காத்திருக்கும் நேரத்தை பயனுள்ளதாக மாற்றிய முத்துக்கண்ணன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
23:52


சிவகாசி:ஒரு சமூகத்தினுடைய அறிவு கருவூலங்கள் நுாலகங்கள் என்றால் அது மிகையல்ல. ஒரு நுாலகமே நல்ல சமூகத்தை வழிநடத்தும் நிலைநிறுத்தும் ஆதாரமாக உள்ளது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது போல் நுாலகங்கள் இல்லா ஊரும் பொலிவு குறைந்ததாகவே அறியப்படுகிறது.மனித வாழ்வு என்பது பலவற்றை கற்று அதன்படி நடப்பதே. நல்ல பயனுள்ள நுால்களை கற்பதனால் மனிதர்கள் தவறு செய்யாமல் வாழும் வகையிலே செய்வதாக அமையும் . ஒரு சமூகம் சிறந்து விளங்குகிறது என்றால் அங்கு கல்வியும் அறிவியலும் வாழ்கிறது என்பதே சாத்தியம்.அந்தவகையில் மக்களை மேன் மக்களாக மாற்றுவதில் இந்த நுாலகங்களுக்கு பெரும் பங்கு உள்ளது. மனிதர்களின் அறிவும் மிகச்சிறந்த பலமான ஆயுதம். எதிரியை அழிக்க வேண்டுமாயின் அவர்களது கல்வியையும் நுாலகங்களை அழிக்க முற்பட்டனர் என்பது வரலாறு.இதன் மூலம் நுாலகத்தின் முக்கியத்துவம் தெளிவாக தெரிகிறது. நுாலகம் என்ற உடனே அமைதியான சூழல் வேண்டும். பல தரப்பட்ட புத்தகங்களை உள்ளடக்கியதையே நுாலகம் என்கிறோம். இங்குள்ள புத்தகங்கள் அனைத்தும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவை.பொறுமை, தேடல் ,ஆழமான வாசிப்பு ,கேள்வியானம், படைப்பாற்றல் போன்ற உயர்ந்த தருணங்களை நுாலகங்கள் வழங்கும். அந்த வகையில் நுாலகம், புத்தகங்களின் அருமையை உணர்ந்து சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோட்டிலுள்ள டயானா டாட்டூஸ் சலுான் கடையில் வித வித புத்தகங்களை வைத்து நுாலகம் அமைத்துள்ளனர். இதற்காக கடை உரிமையாளர் முத்துக்கண்ணன் கடையின் ஒரு பகுதியை தனி அறையாக மாற்றி நுாலகம் அமைத்துள்ளார்.இங்கு தன்னம்பிக்கை புத்தகங்கள், அப்துல்கலாம் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் , நாளிதழ், சிறுவர்களுக்கான கதை புத்தகங்கள், போட்டித் தேர்வில் பங்கேற்கும் வகையான புத்தகங்கள், போன்றவை இடம் பெற்றுள்ளன. வருகின்ற வாடிக்கையாளர்களும் காத்திருக்கின்ற நேரத்தில் புத்தகத்தை ஆர்வமாக படிக்கின்றனர். அலைபேசியை பார்த்து கொண்டிராமல் புத்தகங்களை படித்து தேடல்களையும் நிறைவேற்றி கொள்கின்றனர்.முத்துக்கண்ணன் கூறியதாவது: பொதுவாக வாடிக்கையாளர்கள் எந்த கடைக்கு சென்றாலும் அமர்ந்து காத்திருக்கின்ற நேரத்தில், பெரும்பாலும் அலைபேசியை பார்த்து கொண்டிருப்பர். காத்திருக்கின்ற நேரத்தை வாடிக்கையாளர்கள் பயனுள்ள வகையில் கழிப்பதற்காக கடையின் ஒரு பகுதியில் நுாலகம் அமைத்துள்ளேன்.வரும் வாடிக்கையாளர்களும் பொறுமையாக காத்திருந்து புத்தகத்தை படிக்கின்றனர். ஒரு சிலர் குறிப்பிட்ட புத்தகம் வேண்டும் என கேட்கின்றனர். அதையும் வாங்கி வைக்கின்றேன், ஏன்றார்.இவரை பாராட்ட 91598 20599.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X