ஆசிரியர்கள் கையெடுத்து வணங்கும்படி இருக்க வேண்டும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
23:55

தமிழக அரசின் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை சுதா, நம்மிடம் பகிர்ந்துகொண்டவை:திருப்பூர் மாவட்டம், உடுமலை ராகல்பாவி கிராமம் சொந்த ஊர்; 1999ல், குடிமங்கலம் அரசு துவக்கப்பள்ளி ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். 2011 முதல் சேகாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராகவும்; பின், பதவி உயர்வு பெற்று, எட்டு ஆண்டாக கணபதிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் உள்ளேன். தலைமை ஆசிரியராக தன்னிச்சையாக செயல்பட முடிகிறது.குடும்பத்தை எப்படி வழிநடத்தி செல்ல வேண்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வருவது எப்படி என்ற அறிவுரைகளை வழங்கிய எனது தந்தை கிருஷ்ணசாமிதான் எனக்கு ரோல் மாடல். கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு கிடைக்காதது, அரசு பள்ளி குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன்.அதற்காக, பல்வேறு வலி, வேதனைகளை பொறுத்துக்கொண்டு பல்வேறு நிறுவனங்களுக்கு ஏறி இறங்கி பள்ளியை மேம்படுத்தி வருகிறேன். பொறுமையைக் கடைபிடித்ததற்கு கிடைத்த அங்கீகாரமாக தமிழக அரசின் விருதை கருதுகிறேன்.கடந்த 2014--15ல் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான குஜராத் அரசு பள்ளிக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கியது. 2017---18ல் மியூசிக், பேண்டு, கராத்தே உள்ளிட்ட பயிற்சிகள் அரசு பள்ளியில் கொண்டு வந்ததால், புதுமைப்பள்ளி விருது கிடைத்தது.ஆசிரியர்கள் என்றால் கையெடுத்து கும்பிடும்படி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். கொரோனாவால் பள்ளிகள் செயல்படாவிட்டாலும் வாட்ஸ் அப் மூலமும், மாணவர்களின் வீடுகளுக்குச் சென்றும் பாடம் நடத்தி வருகிறோம்.வேலைக்கு செல்லும் பெற்றோர், தமது பிள்ளைகள் படிக்கட்டும் என்று நம்பி மொபைல் போனை கொடுத்து செல்கின்றனர். படிப்பில் கவனம் செலுத்தாமல், சிலர் பாதை மாறி செல்லும் அபாயம் உள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு எது ஆகாதோ அதையே கையில் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை எண்ணி வருந்துகிறேன். பள்ளிகள் திறக்கப்பட்டதும் இந்த நிலையை மாற்றி, புதிய எதிர்காலத்தை அவர்களுக்கு உருவாக்கித் தர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.வேலைக்கு செல்லும் பெற்றோர், தமது பிள்ளைகள் படிக்கட்டும் என்று நம்பி மொபைல் போனை கொடுத்து செல்கின்றனர். படிப்பில் கவனம் செலுத்தாமல், சிலர் பாதை மாறி செல்லும் அபாயம் உள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு எது ஆகாதோ அதையே கையில் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை எண்ணி வருந்துகிறேன்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X