இன்று, 3வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம்: 'மிஸ் பண்ணிடாதீங்க...'அச்சமின்றி பங்கேற்க கலெக்டர் 'அட்வைஸ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

26 செப்
2021
02:10
பதிவு செய்த நாள்
செப் 25,2021 23:59

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், மூன்றாவது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது; 80 ஆயிரத்து, 210 நபர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டத்தில், 20.77 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிப்பதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அவர்களில், ஆறு லட்சத்து, 21 ஆயிரத்து, 708 பேர் முதல் 'டோஸ்' தடுப்பூசியும், 58 ஆயிரத்து, 536 பேர், இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.முதன்முதலாக நடந்த, 12ம் தேதி சிறப்பு முகாமில், ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 163 நபர்களும்; 19ம் தேதி நடந்த இரண்டாவது முகாமில், 89 ஆயிரத்து, 379 நபர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.



மூன்றாம் கட்ட சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம், இன்று நடக்கிறது. இன்றைய முகாமில், 80 ஆயிரத்து, 210 நபர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது:மாவட்ட அளவில், 631 முகாம், 41 நடமாடும் முகாம்களில், மூன்றாம் கட்ட கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை (இன்று )நடக்கிறது. காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை முகாம் நடக்க உள்ளது.அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், தனியார் மருத்துவமனைகளில் முகாம் நடக்க உள்ளது.



பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பணியாளர், தன்னார்வலர் என, 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர், தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட உள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், தடுப்பூசி போடாமல் விடுபட்டவர்கள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். ஒவ்வொருவரும், வீட்டில் இருந்து வெளியே வரும் போது, கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை, கட்டாயம் பின்பற்ற வேண்டும்.



கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.திருப்பூர் மாவட்டத்தில், தடுப்பூசி போடாமல் விடுபட்டவர்கள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.மாநகராட்சி பகுதியில்...திருப்பூர் மாநகராட்சியின், 17 நகர்நல மைய எல்லைகளுக்கு உட்பட்ட, 138 மையங்களில், தடுப்பூசி முகாம் நடக்கிறது. அதற்காக, ஒவ்வொரு மையத்துக்கும், தலா, 240 'டோஸ்' தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளன.



பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், தெற்கு எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும், தலா, 500 டோஸ் ஒதுக்கி, சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.முகாம் சிறக்க ஆலோசனைதிருப்பூர் மாநகராட்சி பகுதியில், மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் ஏற்பாடு குறித்து, கமிஷனர் கிராந்திகுமார் ஆலோசனை நடத்தினார். நகர்நல அலுவலர் பிரதீப்கிருஷ்ணகுமார், டாக்டர்கள், சுகாதார அலுவலர்கள் பங்கேற்று, முகாம் ஏற்பாடுகளை விவரித்தனர். போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி இலக்கை பூர்த்தி செய்ய, ஒவ்வொருவரும் பாடுபட வேண்டுமென, கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X