உழவர் சந்தையில் தராசுக்கு ரூ.50 லஞ்சம்: விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
00:25

திருப்பூர்:திருப்பூர் உழவர் சந்தைகளில், தினமும் தராசு வழங்க, 50 ரூபாய் லஞ்சம் பெறுவதாக, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், கலெக்டரிடம் கொடுத்தமனு:கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு, உடனடியாக தள்ளுபடி சான்றிதழ் வழங்கி, நகைகளை திரும்ப வழங்க வேண்டும். திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், தராசு வழங்க, தினமும் 50 ரூபாய் லஞ்சம் பெறுகின்றனர். உழவர் சந்தையில், விவசாயிகள் தங்க அனுமதிக்க வேண்டும்.திருப்பூர் தெற்கு, வடக்கு உழவர் சந்தைகள் அருகே, மற்ற காய்கறி கடை இயங்குவதை தடுக்க வேண்டும். கொரோனா காரணமாக, இரவு நேரம் இயங்கி வரும் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டை, மீண்டும் பகல் நேரத்துக்கு மாற்ற வேண்டும். மின்திட்டங்களால் பாதித்த விவசாயிகளுக்கு, உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளதால், கெயில் நிறுவன பணி விவசாய நிலத்தில் நடப்பதை தவிர்க்க வேண்டும். இனாம் நிலங்களை உழுது வரும் விவசாயிகளுக்கு, உழவர் பெயரில் பட்டா வழங்கப்பட வேண்டும். புகழூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், 'பாசன நீரை முறையாக பயன்படுத்தவும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர்வதையும் உறுதி செய்ய வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X