காய்கறி தோட்டம்; மாணவர்களிடம் விழிப்புணர்வு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
காய்கறி தோட்டம்; மாணவர்களிடம் விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
00:37

திருப்பூர்:ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு, சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், மாணவர்களுக்கான சமையல் காய்கறி தோட்டம் பயிற்சி முகாம் கல்லுாரியில் நடந்தது.என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். பேராசிரியர் ரபீத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காய்கறி தோட்டம் அமைக்க மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.அவர் பேசுகையில், 'முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர், உங்கள் இல்லங்களுக்கு சென்று ஊட்டச்சத்து மிக்க சமையல் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும்.துரித உணவினை இளைஞர்கள் தவிர்த்து இயற்கையான காய்கறிகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும்,' என்றார். மாணவ செயலர்கள் கிருபாகரன், சந்தீப், அருள்குமார், பூபாலன் ஆகியோர் தலைமையில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, முள்ளங்கி, தக்காளி, மிளகாய் போன்ற, 10 வகையான விதைகளை விதைத்து காய்கறி தோட்டம் அமைத்தனர். இதற்கான ஏற்பாட்டினை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X