பல்லடம்:வீடு கட்டும் திட்டத்தில், 500 பேருக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கவலை அளிப்பதாக நெசவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இது குறித்து பாரதிய மஸ்துார் சங்கத்தின், கோவை மண்டல செயலாளர் நடராஜன் கூறியதாவது:வீடு கட்டும் மானியத்தை அரசு, 4 லட்சம் ரூபாயாக உயர்த்தியது வரவேற்கத்தக்கது. ஆனால், மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்கங்களின் கீழ், பல ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். தமிழக அரசு, 500 பேருக்கு மட்டுமே வீடு கட்ட மானியம் வழங்க ஒதுக்கீடு செய்துள்ளது. இது, 'யானைப் பசிக்கு சோளப்பொறி' போன்றதாகும்.வீடு கட்ட இடமும் இல்லாமல் நெசவாளர்கள் பலர் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு தரும் மானியம் அனைத்து நெசவாளருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், இடம் இல்லாமல் சிரமப்படும் நெசவாளர்களுக்கு அரசே இடம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.