திருப்பூர்:குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, மாநில அரசு மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக, எம்.பி., சுப்பராயன் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து, மாநகராட்சி கமிஷனருக்கு, அவர் அனுப்பிய கடிதம்:கடந்த சில நாட்களாக, திருப்பூர் மாநகராட்சி பகுதியில், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.மூன்று குடிநீர் திட்டம்வாயிலாக, அதிக அளவு குடிநீர் கிடைக்கிறது. இருப்பினும், பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் ஏன் முறையாக வழங்கப்படுவதில்லை என கேள்வி எழுந்துள்ளது.