கூலி உயர்வு கிடைக்குமா? விசைத்தறியாளர் ஏக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
00:51

பல்லடம்:திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு உட்பட்ட பெரும்பாலான விசைத்தறியாளர்கள் ஒப்பந்தக் கூலி அடிப்படையில் நெசவு செய்கின்றனர். கடந்த, 2014ம் ஆண்டு முதல் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி, போராடி வருகின்றனர். கடந்த காலங்களில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.ஊரடங்கு பாதிப்புகளுக்கு பின், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏழு முறை நடத்தும், ஒவ்வொரு முறையும் ஒத்திவைப்பு என்ற முடிவே எட்டப்பட்டு வருவது விசைத்தறியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது.விசைத்தறியாளர்கள் கூறியதாவது: ஆறு ஆண்டுகள் கடந்தும் கூலி உயர்வு ஒப்பந்தம் அமல்படுத்தப்படாமல் உள்ளது. ஊரடங்கு பாதிப்புகளுக்கு பின், பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படும் என எதிர்பார்த்தோம். கோர்ட் வழக்குக்கு 'வாய்தா' வாங்குவது போல், எட்டாவது முறையாக மீண்டும் அக்., 22 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சோமனுார் பகுதி ஜவுளி உற்பத்தியாளர் வந்தால், பல்லடம் பகுதியினர் வருவதில்லை; இவர்கள் வந்தால், சோமனுார் பகுதியினர் வருவதில்லை. இதனால், பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி ஏற்படுகிறது. தீபாவளி நெருங்கி வருவதால் அதற்கு முன் கூலி பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும். அமைச்சர் மனது வைத்தால், கலெக்டர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வு ஏற்படுத்த முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X