போலீஸ் டைரி: வாகன விபத்து பெண் பலி | திருப்பூர் செய்திகள் | Dinamalar
போலீஸ் டைரி: வாகன விபத்து பெண் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
00:56

பல்லடம் அடுத்த கணபதிபாளையம், மலையம்பாளையத்தை சேர்ந்தவர் அமராவதி, 70; பனியன் தொழிலாளி.மனைவி மணிமேகலை, 65. நேற்று முன்தினம், இருவரும் டூவீலரில் மலையம்பாளையம் - பல்லடம் நோக்கி வந்தனர். பல்லடம் பனப்பாளையம் அருகே, அடையாளம் தெரியாத பஸ் டூவீலரில் உரசி சென்றது. அதில், நிலைதடுமாறி டூவீலருடன் இருவரும் கீழே விழுந்தனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மணிமேகலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமராவதி சிகிச்சை பெற்று வருகிறார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.



பீகார் வாலிபர் பலி


பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சைலேஸ்சஹானி, 35. கடந்த, இரண்டு மாதங்களாக ஊதியூர் அருகே கம்பிளியம்பட்டியில் தங்கி கல்குவாரியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், வேலை செய்த போது, எதிர்பாராவிதமாக, 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்து இறந்தார். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.



குட்கா விற்றவர் கைது


மூலனுார், பெரியவாரப்பட்டியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடப்பதாக மூலனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை செய்தனர். குட்கா விற்று வந்த, சுந்தரம், 53 என்பவரை போலீசார் கைது செய்து, 21 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.மின்சாரம் தாக்கி வாலிபர் பலிதாராபுரம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் சங்கிலிதுரை, 30. இவர், குளத்துபுஞ்சை வீதியில் உள்ள தனது நண்பர் வீட்டில் மேற்கூரை பராமரிப்பு பணியில் ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக சங்கிலிதுரை மீது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


பாம்பு கடித்து பெண் பலி


தாராபுரம், கோவிந்தாபுரம், பெரியபுத்துாரை சேர்ந்தவர் லதா, 28. இவர், கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, பாம்பு கடித்தது. லதாவை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.



மெக்கானிக் தற்கொலை


வெள்ளகோவில், தீத்தாம்பாளையத்தை சேர்ந்தவர், பொன்னுசாமி, 63. சைக்கிள் மெக்கானிக் வேலை செய்து வந்தார். நேற்று, காலை 11:00 மணியளவில் தனது வீட்டின் உத்தரத்தில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தொழிலாளி தற்கொலை


பல்லடம் அருகே குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 58; பனியன் தொழிலாளி. மனைவி பானுமதி, 55, மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தில், அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்து, நேற்று வீட்டில் சக்திவேல், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X