திருப்பூர்:குன்னத்துார் அருகே செங்காளிபாளையத்தைச் சேர்ந்தவர் மணி 54. அவரது மகளுக்கு ஊராட்சியில் வேலை வாங்கித் தருவதாக, குன்னத்துார் நகர அ.தி.மு.க., செயலாளர் அய்யாசாமி, 53, அவரிடம் 2.3 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளதாக தெரிகிறது.சில ஆண்டுகளாகியும் வேலை வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தை கேட்ட போதும் திருப்பித்தரவில்லை.பணம் குறித்து வற்புறுத்தி கேட்ட போது, அய்யாசாமி, அவரது மகன், இளைஞர் பாசறை நிர்வாகியான கிருபாகரன் ஆகியோர் மணிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து, மணி நேற்று முன்தினம் திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.எஸ்.பி., உத்தரவின் பேரில், குன்னத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து, தந்தை - மகன் இருவரையும் கைது செய்தனர்.