ரூ.70 லட்சம் சீட்டு பணம் மோசடி: குடும்பத்தினர் மீது போலீசில் புகார் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
ரூ.70 லட்சம் சீட்டு பணம் மோசடி: குடும்பத்தினர் மீது போலீசில் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
00:57

திருப்பூர்:திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி, 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.திருப்பூர் - முருகம்பாளையத்தை சேர்ந்த ஆனந்த பூபதி மற்றும் சிலர் நேற்று திருப்பூர் மாநகர போலீஸ் அலுவலகத்தில் அளித்த மனு:கே.வி.ஆர். நகரில் பிளே ஸ்கூல் நடத்தும், மோகன்தாஸ், அவர் மனைவி மணிமேகலை, மகள்கள் துஷ்சிட்டா, ஸ்ரீதர்ஷினி ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தினர். இதில், பலரும் சீட்டு சேர்ந்தோம். சீட்டு முதிர்வடைந்தும், பலருக்கும் பணம் தரவில்லை.கடந்தாண்டு இது குறித்து கேட்டபோது, அவர் தனது சொத்துகளை விற்று பணம் தருவதாக வக்கீல் மூலம் தெரிவித்தார். அதனால் நாங்கள் பணம் திரும்ப வரும் என நம்பிக்கையுடன் காத்திருந்தோம். இந்நிலையில் அவர் குறிப்பிட்ட சொத்துகளை வேறு ஒருவருக்கு கிரயம் செய்து விட்டார்.இதையறிந்து சென்று கேட்ட போது எங்களை மிரட்டியும், தகாத முறையில் பேசியும் அவமதித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுத்து எங்கள் சீட்டு பணத்தைத் திரும்ப பெற்றுத் தர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X