ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: 19 பதவிகளுக்கு, 41 பேர் போட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
00:58

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட ஊராட்சியின், 10வது வார்டில், அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள் உட்பட, ஏழு பேர் களத்தில் உள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 19 பதவிகளுக்கான, ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கிறது. மொத்தம், 80 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்; வேட்புமனு தள்ளுபடி, வாபஸ் பெற்ற பிறகு, 41 பேர் களத்தில் உள்ளனர்.மாவட்ட ஊராட்சியின், 10வது வார்டில் (காங்கயம், வெள்ளகோவில் ஒன்றியம்), ஏழு பேர் களத்தில் உள்ளனர்.லட்சுமி (அ.தி.மு.க.,), வி.கிருஷ்ணவேணி (தி.மு.க.,), எம்.கிருஷ்ணவேணி (தே.மு.தி.க.,), ராதா (அ.ம.மு.க.,),வனிதா (நாம் தமிழர் கட்சி), ரேவதி (சுயே.,) மற்றும் கலாமணி (சுயே.,) ஆகியோர் களத்தில் உள்ளனர்.தாராபுரம் ஒன்றியம்தாராபுரம் ஒன்றியத்தின், 12வது வார்டில், தி.மு.க., - பா.ஜ., கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. மொத்தம், ஏழு பேர் மனு செய்திருந்த நிலையில், நான்கு பேர் வாபஸ் பெற்றதால், மூன்று பேர் மட்டும் களத்தில் உள்ளனர்.முருகசாமி (பா.ஜ.,), சுப்பிரமணி (தி.மு.க.,), திருவினாகுடி (அ.ம.மு.க.,)ஊராட்சி தலைவர்மூலனுார் ஒன்றியம் எரிசனம்பாளையம் ஊராட்சியில், நான்கு பேர்; அவிநாசி ஒன்றியம், கருவலுாரில், நான்கு பேர்; உடுமலை ஒன்றியம், ஆர்.வேலுாரில், மூன்று பேர் என, ஊராட்சி தலைவர் தேர்தலில், 11 பேர் களத்தில் உள்ளனர். மொத்தம், 14 ஊராட்சிகளில், 14 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலில், 40 பேர் மனு செய்திருந்தனர்.அவிநாசி ஒன்றியம், ராமநாதபுரம்; காங்கயம் - கணபதிபாளையம் ஊராட்சி; தாராபுரம் - பொன்னாபுரம் ஊராட்சி; குண்டடம் - எரிசனம்பாளையம்; பல்லடம் - மாணிக்காபுரம் ஊராட்சி; பொங்கலுார் - வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி வார்டுகளில், இறுதியில் ஒருவர் மட்டும் மனு செய்திருந்ததால், போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி - 5 பேர்; பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி -4 பேர்; ஊத்துக்குளி வடுகபாளையம் ஊராட்சி - 3 பேர்; குடிமங்கலம் ஒன்றியம் ஆமந்தகடவு, வெள்ளகோவில் ஒன்றியம் மேட்டுப்பாளையம், மூலனுார் ஒன்றியம் கருப்பணன்வலசு, பொங்கலுார் ஒன்றியம் உகாயனுார் ஊராட்சி ஆகிய, தலா, இரண்டு பேர் களத்தில் உள்ளனர்.கண்காணிப்பாளர் நியமனம்

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தல் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளன. மாவட்ட தேர்தல் பார்வையாளராக பூம்புகார் கப்பல் கழக நிர்வாக இயக்குநர், சிவசண்முகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து அவரிடம், 95663 88446 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என, மாவட்ட தேர்தல் அலுவலர் வினீத் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X