கூடுதல் உரம் வாங்க கடைகள் நிர்பந்தம்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
00:59

திருப்பூர்;தனியார் உரக்கடைகளில், யூரியாவுடன், வேறு ஏதாவது உரம் வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்துவதாக, விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.திருப்பூர் மாவட்ட அளவிலான, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். தாராபுரம் சப் கலெக்டர் ஆனந்த்மோகன், வேளாண் இணை இயக்குனர் மனோகரன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மனோகரன்: கொப்பரை தேங்காய் விலை மிகவும் சரிந்துவிட்டது; ஒரு கிலோ விலை, 100 ரூபாயக்கு கீழ் சென்றுவிட்டதால், அதிகபட்ச விலை வழங்க வேண்டும்.உ.உ.க., மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி: நெல் நடவு பணி துவங்க, 20 நாட்களாகும் என்பதால், அமராவதியில் இருந்து திறக்கும் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும். நடப்பு பசலி(1431) அடங்கல் இருந்தால் மட்டுமே, கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் கிடைக்கிறது; இருப்பினம், வி.ஏ.ஓ.,கள் வழங்க மறுக்கின்றனர். வேலை உறுதி திட்டத்தில், பாரபட்சமின்றி விவசாய நிலங்களை தேர்வு செய்ய வேண்டும்.


தாராபுரம் விவசாயி பழனிசாமி: அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், ரோடு பழுதானதால், கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்; எடைமேடை, 'வெப்கேமரா' வசதி செய்ய வேண்டும். குரங்கு தொல்லை அதிகரித்துவிட்டதால், வனத்துறை பிடித்து வனத்துக்குள் விட வேண்டும்.தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து: அமராவதியில் இருந்து வீணாகும் உபரி நீரை, உப்பாறு அணையில் தேக்க, 25 கி.மீ., துாரம் குழாய் பதிக்க வேண்டும். பி.ஏ.பி., தண்ணீரை, நார் தொழிற்சாலைகள் தேக்கி வைத்து பயன்படுத்துவதால், கடைமடைக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. சூரியநல்லுாரில், மீண்டும் மருத்துவ கழிவு ஆலை இயங்க அனுமதிக்க கூடாது.பி.ஏ.பி., பகிர்மான குழு தலைவர் கோபால்: கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டும், விவசாயிகளின் நகைகள் திருப்பி வழங்கப்படாமல் இருக்கின்றன. இந்தாண்டு பயிர்க்கடன் பெற முடியாத சூழல் உள்ளது.மாவட்டத்தில், யூரியா தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. உரக்கடைகளில், யூரியாவுடன், வேறு ஏதாவது உரம் வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்துகின்றனர். கடந்த ஆட்சியில், மும்முணை மின்சாரம் வழங்கப்படுமென அரசாணை வெளியிட்டும், எவ்வித பணியும் நடக்கவில்லை.மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் நல சங்க தலைவர் பொன்னுசாமி: திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகம் சென்றுவர, பஸ் வசதியில்லாததால், மங்கலம், ஆண்டிபாளையம், இடுவாய் கிராமங்களை, திருப்பூர் வடக்கு தாலுகாவுடன் இணைக்க வேண்டும்.


தெற்கு தாலுகாவில், 16 கிராமங்கள் உள்ளன; வடக்கில், ஏழு கிராமம் மட்டுமே இருப்பதாலும், மிக அருகே இருப்பதாலும், வடக்கு தாலுகாவில் இணைக்க வேண்டும்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சின்னசாமி மற்றும் கேசவன்: ஊத்துக்குளி தாலுகா, கவுண்டம்பாளையம் பகுதியில், பிரின்டிங் நிறுவனங்களால், நிலத்தடி நீர் பாதிக்கிறது. மழைகாலத்தில், கழிவுநீரை வெளியேற்றுகின்றன; நிறுவனங்கள் இயங்க அனுமதிக்க கூடாது. ஊத்துக்குளி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில், கருவூலகணக்கில் பணம் செலுத்த வசதி செய்ய வேண்டும்.விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுத்து, அதற்கான பதில் கடிதம் அனுப்ப வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X