அமெரிக்கா பறக்கும் அனகாபுத்துார் புடவைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:00


சென்னை : வெளிநாட்டு பொருட்களின் மீது நம்மூர் மக்களுக்கு உள்ள மோகம் அனைவரும் அறிந்ததே. ஆனால், சமீப காலமாக, நம்மூர் பாரம்பரிய தயாரிப்பு பொருளுக்கு, வெளிநாட்டில் கிராக்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, பல்லாவரம் தொகுதியில் அடங்கிய அனகாபுத்துாரில், இயற்கை நார் நெசவு குழுமம் இயங்கி வருகிறது.


இக்குழுமத்தினர், வாழை, கற்றாழை, அன்னாசி, மூங்கில், வெட்டிவேர் ஆகிய இயற்கை நார்களில் இருந்து சேலை, சட்டை என, பல விதமான ஆடைகளை உற்பத்தி செய்கின்றனர்.வாழை நாரில் இருந்து பைகள், பனை ஓலையில் இருந்து 'கிப்ட்' பெட்டிகளையும் உற்பத்தி செய்கின்றனர். இயற்கை நார்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் புடவைகளுக்கு, தமிழகத்தில் பெரிய அளவு மவுசு இல்லை என்றாலும், மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் விரும்பி வாங்கி அணிகின்றனர்.இயற்கை நார் நெசவு குழுமத்தினர், தாங்கள் தயாரிக்கும் இயற்கை நார் ஆடைகள் குறித்து, சமூக வலைதளமான, முகநுாலில் பதிவிட்டுள்ளனர். இதை பார்த்து, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அவர்களை தொடர்பு கொள்கின்றனர்.அப்படி தொடர்பு கொள்பவர்களுக்கு, புடவைகளின் மாடல்கள் அனுப்பப்படுகின்றன. அதை பார்த்து, தேவையான புடவையை தேர்வு செய்து, அதற்கான கட்டணத்தை வங்கி கணக்கில் செலுத்தி விடுகின்றனர்.



அதன்பின், நெசவு குழுவினர், அந்த புடவையை 'கூரியர்' மூலம் அனுப்பி விடுகின்றனர். ஓராண்டாக இந்த வியாபாரத்தில், நெசவு குழுமத்தினர் ஈடுபட்டு உள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு புடவையும், 6,000 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும், அதிகபட்சம், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், புடவைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர்.குறிப்பாக, இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும், இயற்கை நார் ஆடைகளை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.



இது குறித்து இயற்கை நார் நெசவு குழும நிர்வாகிகள் கூறுகையில், 'நம்மூர் இயற்கை தயாரிப்பை வெளிநாட்டினர் விரும்பி பயன்படுத்துவது மகிழ்ச்சியாக இருந்தாலும், உள்ளூரில் அதிகளவு விற்பனையாகாதது வருத்தமாகவும் உள்ளது.இயற்கைக்கும், உள்ளூர் தயாரிப்புகளுக்கும் மக்கள் முக்கியத்துவம் தர வேண்டும்' என்றனர். இக்குழுமத்தை தொடர்பு கொள்ள நினைப்பவர்கள், 98415- 41883 என்ற எண்ணில் அழைக்கலாம்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X