திருப்பூர்:கோவை மாநகராட்சி கழிவுநீர், சுத்திகரிப்பு செய்யாமல், ஆற்றில் விடப்படுகிறது. கோவை மாவட்டம், பள்ளபாளையம் குளம் முதல், திருப்பூர் ஆண்டிபாளையம் குளம் வரை, ஆற்று நீர் குளங்களில் சேர்க்கப்படுகிறது.மழை குறைந்துவிட்டதால், நொய்யல் ஆற்றில் வரும் கழிவுநீரை ஆதாரமாக கொண்டே விவசாய பணிகள் நடந்து வருகின்றன. சுத்திகரிக்கப்படாத தண்ணீர் விடுவதால், ஆறு மற்றும் குளங்கள் மாசுபட்டுள்ளன. கிணற்று தண்ணீரும் மாசடைந்துவிட்டது.நொய்யல் ஆற்றை நம்பியுள்ள விவசாயிகள், தென்னையை மட்டுமே பயிரிட்டு வருகின்றனர். நொய்யலில் வரும் தண்ணீரை பங்கிட்டு கொள்வதில், கோவை - திருப்பூர் மாவட்ட விவசாயிகளிடையே, பிரச்னை இருந்து வருகிறது.தற்போது வரை, ஒப்பந்தப்படி தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது. கழிவுநீரை முறையாக சுத்திகரித்து வெளியிட வேண்டுமென, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நொய்யல் கழிவுநீரை விலைக்கு விற்பனை செய்ய, கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.விவசாயிகள் சார்பில், மணவர்மன் என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில்,'கோவை மாநகராட்சி நிர்வாகம், நொய்யல் கழிவுநீரை விற்பனை செய்ய, தன்னிச்சையாக திட்டமிட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து, கோவை மாநகராட்சி முடிவை தடுத்து நிறுத்த வேண்டும்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை, ஒப்பந்தப்படி தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது. கழிவுநீரை முறையாக சுத்திகரித்து வெளியிட வேண்டுமென, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.