திருப்பூர்:திருப்பூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்; பனியன் தொழிலாளியாக இருந்த இவர் எழுத்தாளராகவும் விளங்கினார்.மறைந்த இவரது, நான்கு நாடகங்கள் அடங்கிய, 'மறு விசாரிப்பு' நாடகத்தொகுப்பு நுால், டைமண்ட் தியேட்டர் அருகே திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் கூட்டத்தில் நேற்று வெளியிடப்பட்டது. கவிஞர் மதுராந்தன் வெளியிட எழுத்தாளர் நாதன் ரகுநாதன் பெற்றுக்கொண்டார்.இந்நுாலில் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற பொன்னீலன், சிவதாசன் உட்பட பலரும் பாலகிருஷ்ணன் இலக்கிய வாழ்க்கை குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரமணி எழுதிய, 'சிறையில் துளிர்த்த சிந்தனை அரும்புகள்' என்ற நுால்கள் அறிமுகம் செய்யப்பட்டன.திரைப்பட இயக்குனர் பாரதிகிருஷ்ணகுமாரின், 'ராமையாவின் குடிசை' என்ற ஆவணப்படம் பற்றிய கட்டுரையை சுப்ரமணியம் வாசித்தார். ராஜா, பாண்டியராஜன் உள்ளிட்ட மக்கள் மாமன்ற நிர்வாகிகள், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பங்கேற்றனர்.