மாவட்ட ஊராட்சி 3வது வார்டு தேர்தல்:அவிநாசியில் வீசுது அனல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:03

அவிநாசி:கோவை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்தல் களம், அவிநாசி அரசியல் களத்தில் அனல் பறக்க செய்திருக்கிறது.கோவை மாவட்ட ஊராட்சிக்குழுவில், அன்னுார் ஒன்றிய பகுதிகளை உள்ளடக்கிய, 3வது வார்டுக்கான மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த பதவிக்கு, தி.மு.க., சார்பில், அன்னுார் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன் களமிறங்குகிறார்.



அ.தி.மு.க., சார்பில், அவிநாசிதொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமி போட்டியிடுகிறார். கடந்த, 1996--2001ல், அவிநாசி எம்.எல்.ஏ.,வாக இருந்த இளங்கோவனின் மகன் தான் ஆனந்தன்.அச்சமயம், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்துக்குள் திருப்பூர் இருந்த நிலையில், 2006ல், மாவட்ட ஊராட்சி குழு தேர்தலில், சேவூரை உள்ளடக்கிய, 6வது வார்டில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ஆனந்தனை எதிர்த்து, அவிநாசியை சேர்ந்த கருப்பசாமி போட்டியிட்டார்.



இதில், ஆனந்தன் வெற்றி பெற்று, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவராகவும் தேர்வானார். பின், 2016, சட்டசபை தேர்தலில், அவிநாசி தொகுதியில் போட்டியிட்டு, அ.தி.மு.க., வேட்பாளர் தனபாலிடம் தோல்வியடைந்தார். அதன்பின், நடந்த தேர்தலிலும், 'சீட்' பெற அவர் கடும் முயற்சி மேற்கொண்டார்.கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அவிநாசி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கருப்பசாமி, வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானார். அவிநாசி சட்டசபை தொகுதி அரசியல் களத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏதாவது ஒரு வகையில் போட்டி இருந்துக் கொண்டே தான் இருந்திருக்கிறது.



மீண்டும், 15 ஆண்டு இடைவெளிக்கு பின், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு, இவர்கள் போட்டியிடுகின்றனர். இது, இருவருக்குமான கவுரவப்பிரச்னை மட்டுமல்ல, எதிர்கால அரசியல் களத்துக்கான வாய்ப்பாகவும், இந்த தேர்தலை கருதுகின்றனர்.அவிநாசி அருகே, சேவூர் ஆலத்தூர் மேடு பகுதியில் வசித்து வரும் கருப்பசாமி, அவிநாசி மையமாக வைத்தே அரசியல் செய்து வருகிறார்.தொகுதி எம்.எல்.ஏ., வாக இருந்த போது,தான் செய்த பணிகளை பட்டியலிட்டு தான், ஓட்டு சேகரிக்க திட்டமிட்டுள்ளார்.



அவரது வெற்றி, தோல்வி, கோவை மட்டுமின்றி, அவிநாசி அரசியல் களத்தி லும் எதிரொலிக்கும்.மீண்டும், 15 ஆண்டு இடைவெளிக்கு பின், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்பதவிக்கு, இவர்கள் போட்டியிடுகின்றனர்.இது, இருவருக்குமான கவுரவப்பிரச்னைமட்டுமல்ல, எதிர்கால அரசியல் களத்துக்கான வாய்ப்பாகவும்,இந்த தேர்தலை கருதுகின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X