ஏழைகளின் பசியாற்றும் ரியல் ஹீரோ ஜிலான் பாஷா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:03

'வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்கெல்லாம்' என கவிபாடினார் முண்டாசு கவிஞர் பாரதி. அதையே இலக்காக வைத்து, வறுமையும், பசியும் நிழல் போல பின்தொடரும் ஏழை மக்களை தேடி தேடிச் சென்று பசியாற்றி வருகிறார், 'ரியல் ஹீரோ' ஜிலான் பாஷா.சென்னை, செங்குன்றம், வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த ஜிலான் பாஷா, 36 வயது இளைஞர். படிப்பு எட்டாம் வகுப்பு தான் என்றாலும், ஏழைகளின் பசியாற்றுவதில் இவர் பிஎச்.டி., என்று தான் கூற வேண்டும்.



வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் சிறிய கடை நடத்தி வருகிறார். 'மற்றவர்களுக்கு எந்த உதவி செய்தாலும், அதில் அவர்களுக்கும், நமக்கும் நிறைவு கிடைக்காது. ஆனால், பசியை போக்கினால் மட்டுமே, இருவருக்கும் மனநிறைவு கிடைக்கும்' என்கிறார் இந்த பாஷா.இதனால் தான், பசியால் வாடுவோருக்கு உதவும் உறுதியுடன், இரண்டு ஆண்டுகளாக சென்னை புறநகர் பகுதிகளில், முறையாக பதிவு செய்யப்பட்ட 'அன்பு உள்ளம்' என்ற தன் அறக்கட்டளை மூலம் சேவையாற்றி வருகிறார்.கொரோனா ஊரடங்கில் இவரது சேவை அளப்பரியது.



தினமும் குறைந்தபட்சம், 200 பேரின் பசியாற்றி மகிழ்ந்தார். இவரது செயல்பாட்டை கண்ட சுற்றுவட்டாரத்தினர், தங்கள் வீட்டு பிறந்த நாள் உள்ளிட்ட சுப விசேஷங்களில் தயாரிக்கும் பிரியாணி உள்ளிட்ட உணவை கூடுதலாக சமைத்து, அதில் ஒரு பகுதியை, அவர் மூலம் பலருக்கும் வினியோகிக்கின்றனர்.'இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு' எனும் இலக்குடன், அன்பு உள்ளம் அறக்கட்டளையின் மனிதநேய சேவை தொடர நாமும் வாழ்த்துவோம். தொடர்புக்கு: 87545 68003.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X