பதம் 'பார்த்தது' பாம்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:06

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், கடந்த, ஆக., மாதத்தில், 109 பேர் பாம்புக்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாம்புக்கடிக்கு பலியாகின்றனர். 30 வகையான பாம்புகளே விஷத்தன்மை கொண்டவை. இதில், கண்ணாடி விரியன், சுருட்டை பாம்பு ஆகியவை கடித்தால் வீக்கம் ஏற்படும். தொடர்ந்து, நெறிக்கட்டி வீக்கமும் அதிகமாகிக் கொண்டே போகும். நாகம், கட்டுவிரியன் கடித்தால் கண்கள் செயல் இழந்து இமைகள் மூடிக்கொள்ளும்; மூச்சுத்திணறல் ஏற்பட்டு, நரம்பு மண்டலங்களும் பாதிக்கப்படக் கூடும்.



பாம்பு கடித்தவர்களுக்கு பெரும்பாலும், நுரையீரல் பாதிப்பு, ரத்த உறையாமல் இருப்பது, சிறுநீரக செயலிழப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. கோவை அரசு மருத்துவமனையில், விலை உயர்ந்த விஷமுறிவு மருந்துகள் அளிக்கப்படுவதால், நோயாளிகளின் உயிரை காப்பாற்ற முடிகிறது.நடப்பாண்டு ஆக., மாதத்தில், 109 பேர் பாம்புக்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே, பாம்பு கடித்தால், ஆம்புலன்ஸ்சுக்காக காத்திருக்காமல், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று, சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.



கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,''கடந்த, 2019 ஆக., மாதத்தில், 104 பேர், 2020 ஆக., மாதத்தில் 60 பேர், நடப்பாண்டு ஆக., மாதத்தில் 72 ஆண்கள், 37 பெண்கள் என, 109 பேர் பாம்புக்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். பாம்புக்கடிக்கு தாமதமின்றி உடனுக்குடன் சிகிச்சை அளிப்பதால், பெரும்பாலும் உயிரிழப்புகள் ஏற்படுவதில்லை,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X