கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சவனாக்கும்! அரசு அறிவிப்பால் சான்று பெற மாணவர்கள் ஆர்வம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:07

கோவை:தொழிற்படிப்புகளில் சேர, 7.5 சதவீத இடஒதுக்கீடு அறிவித்துள்ளதால், அரசு பள்ளிகளில் படித்ததற்கான சான்று பெற, மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பிப்பதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில், நீட் தேர்வு மூலம், மருத்துவ படிப்புகளில் சேர, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.



வேளாண்மை, பொறியியல் போன்ற தொழிற்படிப்புகளில் சேரவும், 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்; கல்வி கட்டணத்தை அரசே ஏற்குமென அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது, ஆறு முதல் பிளஸ் 2 வரை, அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.இன்ஜி., படிப்புக்கான கவுன்சிலிங் துவங்க இருக்கிறது.



வேளாண் உள்ளிட்ட பிற தொழில் படிப்புகளில் சேர, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கலந்தாய்வில் பங்கேற்கும் போது, அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே, இடஒதுக்கீடு சலுகை பெற முடியும். இதற்கு, மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பிப்பதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.


அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், 'தொழிற்படிப்புகளில். 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளதன் மூலம், அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்கும். அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் பெற, ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் படித்திருந்தால், முந்தைய பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றிதழ் பெற்றபின், கடைசியாக படித்த பள்ளியில் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. 'முந்தைய பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் உறுதி செய்த பிறகே, சான்றிதழ் வழங்கப்படுகிறது' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X