உதயமானது வானவியல் கிளப் மாணவர்கள் திறமை மின்னும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:07

கோவை:அரசு பள்ளி மாணவர்களின், வானவியல் ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில், 'கோவை வானவியல் கிளப்' துவங்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும், விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் உதவியோடு, ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கோவை வானவியல் கிளப் துவங்கப்பட்டுள்ளது.அறிவியல் பலகை, மண்டல அறிவியல் மையத்தின் ஒத்துழைப்போடு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, வானவியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதன் தலைவராக, பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் உள்ளார். வானவியல் ஆர்வலர்கள், தொலைநோக்கி வைத்துள்ள 20 பேர், கிளப் ஆலோசகர்களாக உள்ளனர். ஆன்லைன் மூலம் துவங்கப்பட்ட இக்கிளப் செயல்பாடுகள், மாணவர்கள் ஒருங்கிணைப்பது குறித்து, வெப்மினார் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.தலைவர் ரமேஷ் கூறுகையில், ''ஆண்டுதோறும் செப்., 22 மற்றும், 23ம் தேதி சம பகல், சம இரவு நாளாகும். முழு சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட பல்வேறு வானியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதை மாணவர்கள் வெறுமனே படிப்பதற்கு பதிலாக, செயல்முறை விளக்கம் பெற, கிளப் துவங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கழகங்கள் ஒத்துழைப்பு தந்துள்ளன.ஆர்வமுள்ள, 100 அரசு பள்ளி மாணவர்களை இணைத்து, வானவியல் நிகழ்வுகள் குறித்த கருத்தரங்கு நடத்தி, தொலைநோக்கி மூலம், முக்கிய நிகழ்வுகள் பார்வையிட ஏற்பாடு செய்ய முடிவெடுத்துள்ளோம். ஆன்லைன் மூலமாக கிளப் செயல்பாடு நடக்கும். தொற்று கட்டுக்குள் வந்ததும், மற்ற பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த உள்ளோம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X