இணையதள வசதியுடன் நுாலகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:09

'ஆலயம் இல்லாத ஊரில் மட்டுமல்ல, நுாலகம் இல்லாத ஊரிலும் குடியிருக்க கூடாது' என, முன்னோர்கள் கூறுவர்.



நுாலகங்கள் நம் அறிவின் மிகப் பெரிய தேடல் வெளி. நல்ல நுால்களை தேடி படிக்கும் போது, நம் மனம் வளம் பெறுவதுடன், தியானத்திற்கு ஈடாகவும் அது அமைகிறது.இத்தகைய நுாலகத்தை, தம் பகுதி மாணவர்களின் நலனுக்காக, இணையதள வசதியுடன் செய்து கொடுத்துள்ளார், தாம்பரம் அடுத்த வேங்கைவாசலைச் சேர்ந்த கோபு, 47.'இளந்தளிர் மாணவர் குழு' என்ற பெயரில், தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி, இவர் தனது ஊராட்சிக்குட்பட்ட பெரிய ஏரி மற்றும் சித்தேரிகளிலும், அனைத்து பகுதிகளிலும் மரங்களை நடவு செய்து, பாதுகாத்து வருகிறார்.நுாலகம் அமைக்கப்பட்டது குறித்து, அவர் நம்மிடம் கூறியதாவது:எங்கள் ஊராட்சியில், நீண்ட நாட்களாக நுாலக வசதி இல்லை.



இது பற்றி அரசிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனால், பகுதி மாணவர்களின் வசதிக்காக, விக்னராஜபுரம், இரண்டாவது பிரதான சாலையில், இணையதள வசதியுடன் கூடிய நுாலகம் அமைத்துள்ளேன்.மொத்தம், 1.50 லட்சம் ரூபாய் செலவில் நுாலகம் அமைக்கப்பட்டு, கணினி வசதியுடன் கூடிய இலவச இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது.மொத்தம், வரலாறு, சங்க இலக்கியங்கள் உட்பட, 1,000 நுால்கள் இங்கு உள்ளன. இணையதள வசதி, மாணவர்களுக்கு முழுதும் இலவசமாக வழங்கப்படுகிறது. நான், சிறிய அளவில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதால், அதில் கிடைக்கும் வருவாயை வைத்து, நுாலகத்தை உருவாக்கி உள்ளேன்.மாலை நேரங்களில், 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்பும், என் மனைவி ஸ்ரீனா நடத்துகிறார்.நுாலகத்திற்கு வருபவர்களில், மரம் நடும் ஆர்வம் உள்ளவர்கள் வசதிக்காக, 100 மரக்கன்றுகள் வைத்து உள்ளேன்.



மரக்கன்றுகள் கேட்பவர்களுக்கு இலவசமாக வழங்கி வருவதுடன், அவற்றிற்கான பாதுகாப்பு வேலிகளையும் இலவசமாக வழங்கி வருகிறேன்.இங்கு வரும் வாசகர்கள் மற்றும் மாணவர்கள் அமர்ந்து படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. விரைவில், சந்தோஷபுரத்திலும் இதேபோல் புதிதாக நுாலகம் துவங்க திட்டமிட்டு உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X