மரக்கழிவுகளில் உருவான மரச்சிற்பங்களின் கண்காட்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:13

மழை வெள்ளம் காரணமாக விழுந்த மரங்களில் இருந்து உருவாக்கப்பட்ட மரச்சிற்ப கண்காட்சி, சென்னையில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.



நாகர்கோவிலில் உள்ள 'கொல்வேல்' என்ற பகுதியைச் சேர்ந்தவர் விஜய் பிச்சுமணி. தற்போது, சென்னையில் வசிக்கும் இவர், முதுநிலை ஓவியப்படிப்பு படித்தவர்.முழுமையான மரங்களை வாங்கி, அதை கடைந்து சிற்பம் செய்வதே மரச்சிற்பம். ஆனால், இவரோ, மக்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய மரக்கட்டைகளில் இருந்து, அதன் தன்மைக்கேற்ப, ரம்பம், உளி உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி, அழகிய மர சிற்பங்களை படைக்கிறார்.சென்னையில், மழை வெள்ளம் காரணமாக விழுந்து



வீணாகக் கிடந்த மரங்களை பார்த்து தான், இவருக்குள் இப்படி ஒரு எண்ணம் வந்துள்ளது.வீணாக கிடந்த மரங்களையும், மரக்கடைகளில் ஓதுக்கி தள்ளிய மரத்துண்டுகளையும் கொண்டு, மர சிற்பம் படைத்து வரும் மணிகண்டன், தன் படைப்புகளை 'கொல்வேல்' என்ற தலைப்பில் கண்காட்சியாக வைத்து உள்ளார்.சென்னை, நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுசில் நடந்து வரும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பல மர ஓவியங்கள், மிகவும் வித்தியாசமானவையாக உள்ளன.தங்கத்தை விட உழைப்பாளியின் கைகளும், கால் பாதங்களும் முக்கியமானவை. அவை 100 சதவீதம் தங்கத்திற்கு ஈடானவை என்ற தலைப்பில் வைத்துள்ள மரச்சிற்பம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.



இதே போல, மீன் மற்றும் செம்பருத்திப் பூ போன்ற மர சிற்பங்களை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது.அடுத்த மாதம், 25ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியை, ஞாயிறு தவிர்த்து, மற்ற நாட்களில், காலை, 10:00 மணிமுதல் மாலை, 6:00 மணிவரை, பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம். மர ஓவியர் விஜய் பிச்சுமணி தொடர்புக்கு: 97890 33626.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X