குளிர்பானங்கள் குடிக்க தந்திரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:14

ஆல்கஹாலுக்கு அடிமையாவதுபோல், குளிர்பானங்களும் இன்று பலர் அடிமையாகி இருக்கின்றனர். கடந்த, ஆக., மாதம் சென்னையில் குளிர்பானம் குடித்த, 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெற்றோர்களுக்கு ஒர் எச்சரிக்கை மணி.கண்ணை கவரும் வண்ணம், இனிப்பு, குளிர்ச்சியான குளிர்பானங்கள் குழந்தைகளை கவர்ந்திழுக்கிறது. கடைக்கோடி கிராமங்களிலும் மளிகை கடை, பெட்டிக்கடையில், 10 ரூபாய்க்கு இந்த பானங்கள் கிடைப்பது, குழந்தைகள் எளிதில் வாங்கி பருக வசதியாக இருக்கிறது.தாகம் தணிக்காது!இந்த பானங்கள், 'சாப்ட் டிரிங்ஸ்' மென்பானங்கள் எனப்படுகின்றன. செயற்கை சுவையூட்டி, நிறமூட்டி மற்றும் இனிப்புக்காக சிட்ரிக் மற்றும் பாஸ்பரஸ் அமிலங்கள், கார்ப்னேட், பிரக்டோஸ் எனும் சர்க்கரை, காபைன் என எக்கச்சக்க ரசாயனங்கள பயன்படுத்தப்படுகின்றன. இவை, குறைந்தபட்ச தாகத்தை கூட தணிக்காது என்பதே நிதர்சன உண்மை. ஆனால், பாதிப்புகளோ ஏராளம்!பற்சிதைவு முதல் புற்றுநோய் வரைகுளிர்பானங்களில் இருக்கும் சர்க்கரை, குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கிறது. உடற்பருமன் இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், இதய நோய், இரண்டாம் நிலை சர்க்கரை நோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக பானங்கள் குடிப்பது கல்லீரல் செயல்திறன் பாதிப்பு, பல் அரிப்பு மற்றும் சிதைவு, செரிமான பிரச்னை, புற்றுநோய் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.செய்ய வேண்டியது என்ன?குளிர்பானங்களின் பாதிப்பை பெற்றோர் நன்கு அறிந்திருக்கின்றனர். குழந்தைகளுக்கு புரிய வைப்பது அவசியம். அதிலும், புரிதல் மட்டும் குழந்தைகளை குளிர்பானங்கள் குடிப்பதை கைவிட உதவாது. உங்கள் வாழ்க்கை மற்றும் உணவு பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆரோக்கியமான பானங்களை குடிக்கும் பழக்கத்தை, பெற்றோர் மட்டுமின்றி வீட்டிலிருக்கும் அத்தனை பெரியவர்களும் பின்பற்ற வேண்டும்.n வீட்டிலேயே, இரு நிமிடங்களில் தயாரிக்கும் ஆரோக்கிய பான 'ரெசிபி' நிறைய இருக்கிறது. இதை தயாரித்துக் கொடுத்தால், குழந்தைகள் நிச்சயம் விரும்புவர்.n நெல்லி, இஞ்சி சாறு மற்றும் ஜிஞ்சர் மோர், கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ், கலப்பு காய்கறி ஜூஸ் போன்ற இரண்டு நிமிடங்களில் செய்யும் புதிய 'ரெசிபி'களாகும்.n இளநீர், பதனீர், கரும்பு ஜூஸ், பழச்சாறு போன்ற திரவ பானத்தை, வாரம் இருமுறை பருகுவதை வழக்கமாக்குங்கள். அப்போது, இயற்கை பானங்களின் நன்மைகளையும் சொல்லிக்கொடுங்கள்.n வெறும் தண்ணீர் பருகுவது குழந்தைகளுக்கு போரான விஷயம். தண்ணீரை வண்ண நிறங்கள் மற்றும் சுவைகளில் வழங்க, பழங்கள் மற்றும் மூலிகைகளை சேர்த்து ருசியாகவும், ஆரோக்கியமாகவும மாற்றலாம்.n உதாரணமாக, அன்னாச்சி மற்றும் மின்ட், வெள்ளரி மற்றும் தர்பூசணி, ஸ்ட்ராபெரி மற்றும் லெமன், புளூபெர்ரி மற்றும் ரோஸ்பெரி, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை காமினேசனை முயற்சி செய்யுங்கள்.n அன்னாச்சி, கீரை மற்றும் ப்ளுபெர்ரி, பீச் பழம் மற்றும் காலிபிளவர், ஸ்ட்ராபெர்ரி மற்றும் பீட்ரூட் போன்றவை சுவைமிக்க 'ரெசிபி'களாகும். பால் மற்றும் நாட்டு சர்க்கரையை இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X