பாடும் நிலாவுக்கு இசை அஞ்சலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:16

பிரபல பாடகர் எஸ்.பி.பி.,யை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் இந்தி என, பல்வேறு மொழிகளில், 40 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார். அவரது காந்த குரலால், இன்றும் மக்கள் மனதில் நிலை கொண்டிருப்பவர்.அவர் மறைந்து ஓராண்டாகி விட்டது. கோவை மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள், அவரது உருவப்படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். அவரது பாடல்களை சிலர் பாடியும், இசைக்கருவிகளை இசைத்தும் இசை அஞ்சலி செலுத்தினர்.தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்க நிர்வாகி வெற்றிவேலிடம் பேசியபோது...தமிழ் சினிமாவில் எத்தனையோ சிறந்த பின்னணி பாடகர்கள் உள்ளனர். எங்களை போன்ற மேடை இசைக்கலைஞர்களை மதித்து, பாராட்டியவர் எஸ்.பி.பி., மட்டுமே. தமிழகம் முழுவதும் உள்ள மெல்லிசை கச்சேரிகளில், அவர் பாடிய பாடல்களையே அதிகம் பாடி வருகிறோம். ரசிகர்கள் மத்தியில் ஆரவாரம் எழுகிறது; கரகோஷம், விசில் சத்தம் பறக்கிறது.சக இசைக்கலைஞர்களை மதிக்கும் பண்பு அவரிடம் அதிகம். மேடை கச்சேரிகளுக்கு வரும்போது, அனைத்து வாத்திய கலைஞர்களையும் தொட்டு வணங்கிய பிறகே பாடத்துவங்குவார். நலிந்த இசைக்கலைஞர்கள் பலருக்கு நிறைய உதவி செய்திருக்கிறார்; வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். கொரோனா காலத்தில் தமிழகத்தில் உள்ள பல மெல்லிசை கலைஞர்களுக்கு, அவரது அறக்கட்டளை மூலம், 4,000 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினார். இன்று எங்களுடன் இல்லை என்றாலும், அவர் பாடிய பாடல்கள் உள்ளன. மேடைதோறும் அவற்றை பாடிக்கொண்டே இருப்போம், என்றார்.சங்க தலைவர் சாமுவேல்ராஜ், செயலாளர் அபுதாகீர் ஆகியோர் கூறுகையில், 'எஸ்.பி.பி., இறந்து விட்டதாக நினைக்கவில்லை. அவரது பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 'அவர் பாடிய பாடல்களை மேடைகளில் பாடி, ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வாழ வைப்போம்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X