வில்லிவாக்கத்தில் 'தீம் பார்க்' பணிகள் விறுவிறு மக்கள் குதூகலிக்க மாநகராட்சி ஏற்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:17

சென்னை : வில்லிவாக்கத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட ஏரியில், தனியார் பொழுதுபோக்கு மையங்களுக்கு இணையாக, முதல்முறையாக மாநகராட்சியே களம் இறங்கி, 'தீம் பார்க்' அமைத்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர, முழுவீச்சில் ஏற்பாடுகள் நடக்கின்றன.



சென்னை, வில்லிவாக்கம், சிட்கோ நகர் ஏரி, 36.5 ஏக்கர் பரப்பளவு உடையது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான இந்த ஏரியில், கட்டட கழிவுகளும், குப்பை கழிவுகளும் கொட்டப்பட்டு வந்ததுடன், பல்வேறு தரப்பினரும் ஆக்கிரமித்து, ஏரியை கபளீகரம் செய்திருந்தனர்.இந்த ஏரியை மீட்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில், 110 விதியின் கீழ், ஏரியை மீட்டு சீரமைக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.சுத்திகரிப்பு நிலையம்தொடர்ந்து, ஏரியின் மொத்த பரப்பளவில், 11.50 ஏக்கர் பரப்பளவு குடிநீர் வாரியத்தின் நீரேற்று நிலையத்திற்கும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்வதற்கும் ஒதுக்கப்பட்டது.



மிதமுள்ள, 25 ஏக்கர் நிலப்பரப்பில், 10.69 ஏக்கரில் மட்டுமே, ஒரு மீட்டர் ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது. மற்ற நிலபரப்புகள், கழிவுகளாலும், ஆக்கிரமிப்பிலும் சிக்கி இருந்தன. இந்த, 25 ஏக்கர் நிலப்பரப்பு, சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. அவற்றில், மக்களை கவரும் சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற, பல்வேறு அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், இதற்கான பணி, 45 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது.தற்போது வரை ஏரியை துார் வாரி ஆழப்படுத்துதல், கரையை பலப்படுத்துதல் போன்ற பணிகளால், ஏரியின் கொள்ளளவு, 20 ஆயிரம் கன மீட்டரில் இருந்து, 70 ஆயிரம் கன மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.



இதை தவிர, ஏரியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில், நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வண்ண விளக்குகளால், ஏரியை அழகுபடுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது. உலக தரத்திலான தொங்கு பாலம், ஏரியில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணி நடந்து வருகிறது. முழுக்க, முழுக்க கண்ணாடி வாயிலாக அமைக்கப்படும் தொங்கு பாலம், ஏரியின் குறுக்கே, 250 மீட்டர் நீளத்திற்கு, 1 மீட்டர் அகலத்தில் அமைகிறது.இதை தவிர, குழந்தைகளை மகிழ்விக்க விளையாட்டு திடல், குழந்தைகள் விளையாடி மகிழ 'டிராகன்' ரயில் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.


நடைபயிற்சி பாதை


இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வில்லிவாக்கம் பொழுதுபோக்கு பூங்காவில், ஏரியை பலப்படுத்துதல், நடைபயிற்சி பாதைகள் அமைத்தல், விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் முடிவடைய உள்ளன. படகு சவாரிக்காக, புதிய படகுகள் வந்து உள்ளன. தொங்கு பாலம் அமைக்கும் பணியும் விரைவில் முடிவு அடையும்.பொழுதுபோக்கு அம்சங்களுக்கான விளையாட்டு திடல் போன்றவை அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும். பறவைகளை கவரும் வகையில், ஆங்காங்கே மணல் திட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.



இப்பணிகள் முழுமையாக முடிவடைந்த பின், தனியார் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு போட்டியாக வில்லிவாக்கம் பொழுதுபோக்கு மையம் இருக்கும். உலக அதிசயங்களின் வடிவமைப்பும் இங்கு இடம்பெற உள்ளது. மாநகரின் மிகப்பெரிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக, இந்த பூங்கா இருக்கும்.இந்த பூங்காவில், 268 குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இவற்றை அகற்றி மறுகுடியமர்வு செய்ய வேண்டியுள்ளது. இப்பணிகளும் விரைவில் துவக்கப்படும். அதன்படி, 0.5 கி.மீ., சுற்றளவில், சுற்றுச்சுவர் அமைக்கப்படும்.பூங்காவின் முக்கிய பணிகள் முடிவடைந்த நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதில், நடைபயிற்சி மேற்கொள்ளுதல், படகு சவாரி செய்தல் போன்றவற்றுக்கு முதலில் அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.



என்னென்ன பணிகள்? ஏரியை துார் வாருதல், ஏரியின் கொள்ளளவை, 20 ஆயிரம் கன மீட்டரில் இருந்து, 70 ஆயிரம் கன மீட்டராக அதிகரித்தல், ஏரிக்கு கரைகள் அமைத்தல், டி.வி.எஸ்., கால்வாயை ஒட்டி சாலை அமைத்தல் குழந்தைகள் பூங்கா, பெரியவர்களுக்கான உடற்பயிற்சி மையம், நடைபயிற்சி பாதை, ஆவின் விற்பனை நிலையம், நுழைவாயில், பல்நோக்கு தாழ்வாரம், வாகன நிறுத்துமிடங்கள், விளையாடும் இடங்கள், திறந்தவெளி திரைஅரங்கங்கள் பல்வேறு இடங்களில் இருக்கைகள் அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல், மின் கழிப்பறை வசதிகள் அமைத்தல், எல்.இ.டி., விளக்குகள் பொருத்துதல், குப்பை தொட்டிகள் வைத்தல்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X