யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:24

கோவை;யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால், வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.கோவை வனக்கோட்டத்தில் வனப்பகுதியை விட்டு யானைகள் வெளியில் வருவது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.


ஒரு வாரமாக, கோவை வனக்கோட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், கோவை, போளுவாம்பட்டி, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. சீங்குளி, பட்டிசாலை, கோபனாரி, வரப்பாளையம், மாங்கரை, 24 -வீரபாண்டி, முள்ளங்காடு, விராலியூர், நரசீபுரம் கோசாலை, மத்வராயபுரம், ஊமபாளையம், கல்லார், ஓடந்துறை, சிறுமுகை பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் விவசாயிகள், இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் காவல் பணிபுரிவோர் விழிப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



வனத்துறையினர் கூறுகையில், 'அதிகாலை, இரவு நேரங்களில், வெளிவருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இரவில், பொதுமக்கள் பைக்குகளில் பயணிப்பதை தவிர்க்கவும். யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், இரவு நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.


தவிர்க்க முடியாத சூழ்நிலையில், இரவில் வெளியே செல்லும்போது, கைவிளக்குகளை எடுத்துச் செல்லவும். காட்டு யானைகளின் வழித்தடங்களில் நடமாடக்கூடாது. யானை நடமாட்டம் இருந்தால், 1800 425 45456, 0422 -2456 922 ஆகிய எண்களுக்கு தகவல் தர வேண்டும்' என்றனர்.



விவசாயி படுகாயம்



நல்லுார்வயல், சப்பானி மடையை சேர்ந்தவர் பழனிச்சாமி, 40; விவசாயி. நேற்று முன்தினம் இரவு, தோட்டத்துக்கு காவலுக்குச் சென்றுள்ளார். இரவு, 10:30 மணிக்கு வந்த, ஒற்றை காட்டு யானையை விரட்டியிருக்கிறார்.


யானை சென்று விட்டதாக நினைத்து, அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். மறைந்திருந்த காட்டு யானை, பழனிச்சாமியை தாக்கியதில், அவரது இடது கால் மற்றும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. பழனிச்சாமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்த தோட்டத்தினர் சென்று யானையை விரட்டினர். அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X