நாளுக்கு நாள் எகிறுகிறது விதிமீறல்: விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:26

கோவை:உணவு வினியோகிப்போர் போக்குவரத்து விதிகளை அதிகளவில் மீறுவதால், அவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.கோவையில் தனிநபர் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, பொள்ளாச்சி ரோடுகளில் பாலம் வேலைகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவதால், விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.ஜன., முதல் ஆக., வரையிலான காலத்தில், மாநகர போக்குவரத்து போலீசார், மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது தொடர்பாக, 101, மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக, 2,122, அதிவேகத்துக்காக, 8,099, நோ-பார்க்கிங் குறித்து, 1.14 லட்சம், அச்சுறுத்தும் வகையில் வாகனம் செலுத்தியதற்காக, 2,477, ஹெல்மெட் அணியாததற்கு, 4.84 லட்சம், சீட்பெல்ட் அணியாததற்காக, 20 ஆயிரத்து, 578 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.நடப்பாண்டில், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து, 9.14 லட்சம் வழக்குகள் பதிந்து, ரூ.2.22 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில், 8.96 லட்சம் வழக்குகளில், ரூ.3.78 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:உணவு வினியோகிக்கும் நபர்கள் போக்குவரத்து விதிமீறல்களில், அதிகளவில் ஈடுபடுவது தெரிகிறது. சிவப்பு விளக்கு ஒளிரும்போது நிற்காமல் செல்வது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டள்ளது.குறிப்பிட்ட சில ரோடுகளில் வாகன நம்பர் பிளேட்டுகளை படம் பிடிக்கும் தானியங்கி கேமராக்கள் உள்ளிட்ட சிறப்பு தொழில்நுட்பங்களை புகுத்தி உள்ளோம். இதன் மூலம் விதிமீறல் வாகனங்கள் கண்டறியப்படுகின்றன. சிக்னலில் நிற்காமல் செல்வது குறித்து மட்டும், 92 ஆயிரத்து, 926 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கடந்தாண்டு இது, 90 ஆயிரத்து, 145 ஆக இருந்தது. சிவப்பு விளக்கு ஒளிரும்போது நிற்காமல் சென்றால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. புதிய போக்குவரத்து விதிகள் அமலுக்கு வந்தால், இது, ரூ.1,000 ஆக உயரும். கொரோனாவால், கடந்தாண்டு வாகனப் போக்குவரத்து குறைந்திருந்தது. கடந்தாண்டு எட்டு மாதத்தில் சாலை விபத்துகளில், 36 பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டு, 57 ஆக உயர்ந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X