சைபர் கிரைம் குற்றங்கள்: போலீசாருக்கு தேர்வு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
சைபர் கிரைம் குற்றங்கள்: போலீசாருக்கு தேர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:39

கோவை:சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான தேர்வில், 158 போலீசார் பங்கேற்றனர்.தொழில்நுட்பம் பெருகி வரும் இக்காலத்தில், அதைப் பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், அனைத்து தரப்பு போலீசாருக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.கோவை மாவட்ட ஆயுதப்படை, சட்டம், ஒழுங்கு போலீசாருக்கு சைபர் குற்றங்கள் குறித்த தேர்வு நேற்று நடந்தது. கோவை தனியார் கல்லுாரியில் நடந்த தேர்வில், 158 போலீசார் பங்கேற்றனர். மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., சுகாஷினி கண்காணித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X