விமான போக்குவரத்து கட்டுப்பாடு: கோவையில் நவீன கருவிகள் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
விமான போக்குவரத்து கட்டுப்பாடு: கோவையில் நவீன கருவிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
02:48

கோவை:கோவை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுக்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் பொருத்தப்பட உள்ளன.கோவை விமான நிலையத்தில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் அறிவுறுத்தல்களின்படி, பாதுகாப்பு மேம்பாட்டுக்கான நவீன கருவிகள், தகவல் தொடர்பு அமைப்புகளை நிறுவுவது குறித்த ஆய்வு சமீபத்தில் நடந்தது. இத்தாலி மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த இரு தனியார் நிறுவனங்கள் சார்பில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கருவி பொருத்தப்பட உள்ளது.



கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறியதாவது:நவீன கருவி, இன்டர்நெட் புரோட்டோகால் அடிப்படையில் இயங்கக்கூடியது. அதிகளவு நெரிசலான பகுதிகளிலும், சிறந்த ரேடியோ அதிர்வெண் செயல்திறனை கொண்டது.விமான மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை மேம்படுத்துகிறது. பயணிகளின் பாதுகாப்பு அதிகரிக்கும். புதிய கருவி அளவில் சிறியது.

குறைந்த எடை மற்றும் குறைந்த மின்சக்தியை பயன்படுத்துகிறது. தற்போது நடைமுறையில் உள்ள கருவிகளுடன் ஒப்பிடும்போது புதிய கருவி அதிக செயல்திறனை கொண்டுள்ளது. கோவை விமான நிலையம், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டை கொண்டிருக்கும்.இப்புதிய கருவி இந்திய விமான நிலைய ஆணையகத்தின் தகவல் தொடர்பு மற்றும் வழிசெலுத்துதல் அமைப்பு சார்பில் விரைவில் பொருத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X