'கோவில் நகைகளை உருக்குவதில் அரசு நேர்மையாக செயல்படும்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
03:25

மதுரை:''கோவில் நகைகளை உருக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும்,'' என, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சி பள்ளியை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். தீ விபத்திற்குள்ளான வீரவசந்தராய மண்டப சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். பார்வை பாதித்து சிகிச்சை பெற்று வரும் யானை பார்வதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.பின் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்துவதில் ஆகமவிதிகள் சிக்கல் உண்டா என ஆய்வு செய்து பக்தர்களின் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும். சோளிங்கர், அய்யர்மலை கோவில்களில் இந்தாண்டு இறுதிக்குள் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்படும்.கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த பல்வேறு ஆபரணங்கள் ஒன்பது ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. இதில் தெய்வங்களுக்கு பயன்படுத்தக்கூடியவைகளை தவிர, மற்ற ஆபரணங்களை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி அதன்மூலம் கிடைக்கும் வைப்பு நிதி, அந்தந்த கோவில் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.கோவில்களை தமிழக அளவில் மூன்று மண்டலங்களாக பிரித்து ஓய்வுபெற்ற நீதிபதிகள்தலைமையில் நகைகளை பிரித்து உருக்கும் பணி நடக்கும். நகைகளை உருக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.தங்க தேர் எங்கே?ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு, செப்.,15ல் 'தினமலர் ' நாளிதழில் 'கறுப்பு நிறத்தில் மாறிய தங்க தேர்' என்ற தலைப்பில் வந்த செய்தியை சுட்டி காட்டி, இந்த தேர் எங்கு உள்ளது' என கேட்டார். பின் தங்க தேரை ஆய்வு செய்த அமைச்சர், 'நான் வருவதாக அறிந்து தேரை துடைத்துள்ளீர்கள், இத்தேரை பாலீஷ் செய்து புதுப்பிக்க சில நாட்களில் எனக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்' என கோவில் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.அமைச்சர் கூறும்போது, 'தேருக்கான தங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதா என ஆய்வு செய்து மீண்டும் பக்தர்கள் இழுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவல் முடிந்ததும் ராமேஸ்வரம் தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவர்' என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X