வில்லிவாக்கம் குளத்தில் விஷம் கலப்பு? மீன்கள், வாத்துகள் செத்து மிதந்ததால் பீதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
03:39

வில்லிவாக்கம் : வில்லிவாக்கம் கோவில் அருகில் உள்ள குளத்தில், நுாற்றுக்கணக்கான மீன்களும், வாத்துகளும் செத்து மிதந்ததால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசியது.அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகில், திருவீதி அம்மன் கோவிலை ஒட்டி, குளம் உள்ளது.



இந்த குளத்தை, இரண்டு ஆண்டுகளுக்கு முன், சென்னை மாநகராட்சி துார் வாரி, சீரமைத்தது. குளத்தை சுற்றி நடைபாதைகள், விளக்குகள் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது. தொடர்ந்து, அப்பகுதி மக்களின் பங்களிப்போடு, குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள், வாத்துகள் விடப்பட்டுள்ளன.இதனால், தினமும் காலை, மாலை, நடைபயிற்சி செல்லும்போது, மீன்களுக்கு மக்கள் உணவிட்டு வந்தனர்.



நேற்று காலை, திடீரென குளத்தில் நுாற்றுக்கணக்கான மீன்களும், வாத்துகளும் இறந்த நிலையில் மிதந்தன. இதனால் அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசியது. அதிர்ச்சியடைந்த மக்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.மாநகராட்சி ஊழியர்கள், குளத்தில் செத்துமிதந்த மீன்கள் மற்றும் வாத்துக்களை அகற்றி சுத்தம் செய்தனர். சமூக விரோதிகள் யாரேனும், குளத்தில் விஷம் கலந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாநகராட்சி சார்பில், குளம் பராமரிக்கப்பட்டு வருகிறது. குளத்தில் எடுக்கப்பட்ட மீன்கள் மற்றும் தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்' என்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X