மாமல்லபுரம் : முதல்வர் ஸ்டாலின், முட்டுக்காடு - மாமல்லபுரம் இடையே நேற்று 'சைக்கிளிங்' பயணம் சென்றார்.தமிழக முதல்வர் ஸ்டாலின், உடற்பயிற்சி அவசியம் கருதி, 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை, சைக்கிளிங் பயணம் செல்வது வழக்கம்
குறிப்பாக, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரை சாலையில், நீலாங்கரை அல்லது முட்டுக்காடு பகுதியில் இருந்து, மாமல்லபுரம் வரை செல்கிறார்.முதல்வராக பொறுப்பேற்ற பின், ஜூலை, 4ல், சைக்கிளிங் சென்றார். தொடர்ந்து நேற்று, முட்டுக்காடு - மாமல்லபுரம் வரை, சைக்கிளிங் பயண குழுவினருடன் சென்றார்.காலை 7:30 மணிக்கு தனியார் விடுதிக்கு வந்த அவர் ஓய்வெடுத்து, உணவு உண்டு, 9:15 மணிக்கு சென்னைக்கு காரில் சென்றார்.
அவரது பயணத்தின் போது, போக்குவரத்து நிறுத்தப்படாமல் வாகனங்கள் இயக்கப்பட்டன.மாமல்லபுரத்தில், பிரதான சாலையை தவிர்த்து, சர்வீஸ் சாலையில் கடந்தார். போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.மாமல்லபுரம் புறவழி சந்திப்பு துவங்கி, விடுதி பகுதி வரை, பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் சாலை பகுதியை துாய்மைப்படுத்தினர்.