சிதம்பரம் : சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட 'நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு' கோரிய மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி காங்., சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் சிதம்பரத்தில் நடந்தது.
சிதம்பரம் தெற்கு வீதியில் நடந்த போராட்டத்திற்கு மாநில பொது செயலாளர் ஸ்டிபன் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். ஜெமினி ராதா வரவேற்றார். மக்கின், ராஜா சம்பத்குமார், சம்மந்தமூர்த்தி, செய்யது மிஸ்கின் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில செயலாளர் சித்தார்த்தன், அப்துல் மாலிக் பேசினர்.மாநில செயலாளர் ஜெயச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன், சின்ராஜ், முன்னாள் நகர தலைவர்கள் நுார்அலி, ஷர்மா, காங்., ஆர்.டி.ஐ., துறை நகர தலைவர் விக்னேஷ், தொகுதி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த், நகர இணை தலைவர் அசோக்குமார், நகர பொது செயலாளர் மணி, மகளிரணி செல்வி, ஜனகம், மாலா, ருக்குமணி உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் நன்றி கூறினார்.