கடலுார் : கடலுாரில் நேரு யுவகேந்திரா சார்பில் 75வது சுதந்திர தின நாள், பண்டிட் தீனதயாள் உபாத்யாய 105வது பிறந்த நாள் விழா தொடர் ஓட்டம் நடந்தது.அண்ணா விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் ரிஜேஷ் குமார் வரவேற்றார்.
மாவட்ட விளையாட்டு அதிகாரி சிவா முன்னிலை வகித்தார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் வாழ்த்திப் பேசினார்.ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு பங்கேற்று ஆரோக்கிய இந்தியா மற்றும் சுதந்திர நாள் உறுதி மொழியேற்று தொடர் ஓட்டத்தை துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை நிர்வாக உதவியாளர் ராமமூர்த்தி செய்திருந்தார்.
தொடர் ஓட்டம் நீதிபதிகள் குடியிருப்பு வழியாக சென்று மீண்டும் அண்ணா விளையாட்டரங்கில் நிறைவடைந்தது. நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள், தேசிய இளையோர் தொண்டர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். கணக்காளர் புஷ்பலதா நன்றி கூறினார்.