உடல் உறுப்பு தான விழிப்புணர்வு போட்டிகளில் வென்றோருக்கு சான்றிதழ் | கடலூர் செய்திகள் | Dinamalar
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு போட்டிகளில் வென்றோருக்கு சான்றிதழ்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
04:08

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பூவாலை அரசு உயர்நிலைப் பள்ளியில், ஹித்தேந்திரன் அறக்கட்டளை மற்றும் புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கம் இணைந்து, உடல் உறுப்புகள் தான விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.



ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். செயலர் பூரணன், பொருளாளர் வீரபாண்டியன், துணைத் தலைவர் ஜெகன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் தியாகராஜன் வரவேற்றார். உடல் உறுப்புகள் தான விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு, டி.எஸ்.பி., ரமேஷ் ராஜ் சான்றிதழ் வழங்கி, நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் தியாகராஜனை பாராட்டினார்.ஊராட்சித் தலைவர் செல்லப்பன், துணை செயலர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் செந்தில்குமார், அதியமான், சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். அன்பழகன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X