பெண்ணாடம் : பெண்ணாடம் பேரூராட்சி வார்டுகளில் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது.பெண்ணாடம் பேரூராட்சியில் காமராஜர் தெரு, திருவள்ளுவர் தெரு, சோழநகர் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம், அதிக மின்பளு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், பெண்ணாடம், காமராஜர் தெருவில் ரூ.4 லட்சம் செலவில் 100 கே.வி., திறன்கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.இந்த டிரான்ஸ்பார்மரை பொது மக்கள், விவசாயிகள் பயன்பாட்டிற்கு திட்டக்குடி கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு இயக்கி வைத்தார். பெண்ணாடம் உதவி செயற்பொறியாளர் விஜயலட்சுமி, ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவி பொறியாளர் வெங்கடேசன், போர்மேன் ரவிச்சந்திரன் பங்கேற்றனர். மேலும் அக்ரஹாரத்தெரு, தெற்குரத வீதியில் தலா ரூ. 4 லட்சம் செலவில் புதிதாக அமைத்த டிரான்ஸ்பார்மர் இயக்கி வைக்கப்பட்டது.