மதுராந்தக நல்லூரில் விவசாயிக்கு விருது | கடலூர் செய்திகள் | Dinamalar
மதுராந்தக நல்லூரில் விவசாயிக்கு விருது
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
04:11

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த மதுராந்தகநல்லுாரில் இயற்கை விவசாயத்தை செயல்படுத்தும் விவசாயிக்கு விருது மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.



தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை தொழில் நுட்ப மேலாண்மை 2021-22 மாநில சிறப்பு உறுதுணை திட்டத்தில் மதுராந்தகநல்லுார் அரசு நடு நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார்.உதவி வேளாண் அலுவலர் கோபி, வட்டார அட்மா திட்ட அலுவலர் ஆனந்தசெல்வி, பிரதமர் காப்பீடு திட்ட அலுவலர் பாலாம்பிகை முன்னிலை வகித்தனர்.தோட்டக்கலை துணை இயக்குனர் வேல்துரை , வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கென்னடி ஆகியோர் பங்கேற்று இயற்கை விவசாயி ராமதாசிற்கு விருது மற்றும் ஊக்கத் தொகைவழங்கினர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X