வடலுார் : வடலுாரில் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாநிலத் துணைத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். நகர தலைவர் ராமலிங்கம், பொதுச் செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கேசவமூர்த்தி வரவேற்றார். வடலுார் நகரில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்.மது விற்பனையை ஆதார் கார்டு மூலமாக செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டும். அய்யன் ஏரியை பலப்படுத்தி, கரையில் பூங்கா அமைக்க வேண்டும். பழனியப்பன், வாசுதேவன், கமலக்கண்ணன், வேல்முருகன் அய்யனார், கவுரி, ராஜேஸ்வரி, சின்னபொண்ணு உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் கதிர்வேல் நன்றி கூறினார்.