திண்டிவனம் : புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ரகுச்சந்திரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு மரக்காணம் கூட்ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி பல்சர் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 160 குவாட்டர் பாட்டில்கள் மற்றும் 5 லிட்டர் எரிசாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.உடன், திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் ரஞ்சித்குமார், 23; செல்வமணி மகன் சரண்ராஜ், 33; ஆகியோரை கைது செய்து பைக், மது பாட்டில்கள், சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.