கடலுார் : கடலுார் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு நடந்தது.
கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடைப்பந்து கழகத் செயலாளர் விஜயசுந்தரம் தலைமைதாங்கினார்.மூத்த துணைத் தலைவர் இளங்கோவன், துணைத் தலைவர் நடராஜன், பொருளாளர் பாலமுரளி, இணைசெயலாளர்கள் சிட்டிபாபு, சகாயம் முன்னிலை வகித்தனர்.மாவட்ட விளையாட்டு அதிகாரி சிவா, முதுநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உதயகுமார் துவக்கிவைத்தனர்.அசோகன், தேசிய விளையாட்டு வீரர் தங்கதுரை, நடராஜன், அப்துல் கனி, நெடுஞ்செழியன், சந்திரமோகன்,தெய்வநாயகம், முருகன், வெங்கடேசன் வாழ்த்திப் பேசினர். கடலுார், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி உட்பட பல பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இணைச் செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.