திண்டிவனம் : குடிக்க பணம் கேட்டு கூலித்தொழிலாளியை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம், புதுச்சேரி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சொக்கநாதன் மகன் மணிகண்டன், 35; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் சுப்ரமணி சுவாமி கோவில் தெருவில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது, அதே பகுதியை சேர்ந்த மிலிட்டரி ஆனந்தன், 35; மணிகண்டன், 32; ஆகியோர், மணிகண்டனிடம் குடிக்க பணம் கேட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது பாக்கெட்டில் இருந்த 400 ரூபாயை பறித்துச் சென்றனர்.புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து ரவுடிகள் ஆனந்தன், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.