திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் மற்றும் மணம்பூண்டி ஒன்றியங்களில் போட்டியிடும் தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது.
மணம்பூண்டியில் நடந்த கூட்டத்திற்கு, அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்களாக போட்டியிடும் தங்கம், பிரபு மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்களை கட்சியினருக்கு அறிமுகம் செய்து வைத்து, தி.மு.க., வேட்பாளர்கள் 100 சதவீதம் வெற்றிபெற கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.கூட்டத்தில், மாவட்ட செயலாளர் புகழேந்தி, பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர் முருகன், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர்கள் கோபிகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, கணேசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அன்பு உட்பட பலர் பங்கேற்றனர்.