விழுப்புரம் மாவட்டத்தில் 13 ரவுடிகள் கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
விழுப்புரம் மாவட்டத்தில் 13 ரவுடிகள் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
04:36

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 13 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் குற்றப்பதிவேடு ரவுடிகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்குகளில் தொடர்புடையோர் என 345 பேர் வீடுகளில் போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.இதில், சம்பந்தபட்ட ரவுடிகள் அவரவர் வீடுகளில் உள்ளனரா என்றும், இல்லையேல் அவர்கள் தற்போது எங்குள்ளனர், என்ன பணி செய்கின்றனர் என்றும், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் விபரங்களை போலீசார் சேகரித்தனர்.இதில், பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டு ஆயுதங்கள் வைத்திருந்தது மட்டுமின்றி, அவர்கள் நடவடிக்கையில் சந்தேகம் வந்ததன் பேரில், வளவனுார் தீபக்ராஜ், 36; குயிலாப்பாளையம் திருநாவுக்கரசு, 20; திண்டிவனம், சஞ்சீவிராயன்பேட்டை ஆனந்தன், 38; மணிகண்டன், 26; உட்பட 13 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து கத்தி, வீச்சரிவாள் உட்பட 11 ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X