தலையாட்டி பொம்மை அரசு மாஜி முதல்வர் கடும் தாக்கு | செய்திகள் | Dinamalar
தலையாட்டி பொம்மை அரசு மாஜி முதல்வர் கடும் தாக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
04:47

புதுச்சேரி : ''முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு, பிரதமர் மோடிக்கு தலையாட்டும் பொம்மையாக செயல்பட்டு வருவதால் புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.



மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, டில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நாளை நாடு தழுவிய 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் இப்போராட்டத்திற்கு, காங்., கூட்டணி கட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது.இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து காங்., கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் அறிவித்தார்.



அதன்படி நேற்று காலை புதுச்சேரி, எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது வீட்டில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருப்புக்கொடி ஏற்றி, மத்திய அரசுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.வரும் 27ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் பந்த் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.இப்போராட்டத்தில், காங்., கூட்டணியில் உள்ள தி.மு.க., பங்கேற்கவில்லை.பின்னர் அவர் அளித்த பேட்டி:மத்திய அரசு மூன்று வேளாண் சட்டத்தை நிறைவேற்றி விவசாயத்தை கார்ப்பரேட்டிற்கு விற்க முயற்சித்து வருகிறது.



விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் கண்டு கொள்ளவில்லை.புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வரும் அரசு, பா.ஜ.,விற்கு வால் பிடிக்கும் அரசாகவும், பிரதமர் மோடிக்கு தலையாட்டி பொம்மையாகவும் உள்ளது. இதனால், புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X