புத்தேரி வரதராஜ பெருமாள் சுவாமி காய்கறி அலங்காரத்தில் அருள்பாலிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
04:47

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம், இரண்டாம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 10:00 மணியளவில் உலக மக்கள் நலன்பெற வேண்டி சிறப்பு பூஜை; 10:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.



மாலை 6:00 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை, இரவு 7:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.அலங்கரிக்கப்பட்ட மூலவர் சுவாமிகள் காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 8:00 மணிக்கு உற்சவர் சுவாமிகள் வீதியுலா நடந்தது.வரும், அக்டோபர் 2ம் தேதி பழ அலங்காரம், 9ம் தேதி சந்தனகாப்பு அலங்காரம், 16ம் தேதி பணம், நகை அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.



பரங்கிப்பேட்டை பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மூலவர் திருப்பதி சீனிவாச பெருமாள் அலங்காரத்திலும், உற்சவமூர்த்தி புரட்டாசி மாதம் முழுவதும் உள்ள ஒவ்வொரு சனிக்கிழமையும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் அருள்பாலிக்கிறார். பூஜைகளை, சீனிவாச பட்டாச்சாரியார் செய்திருந்தார்.



நெல்லிக்குப்பம்நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பாமா ருக்குமணி சசேதராய் வேணுகோபால சுவாமி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். பூலோகநாதர் கோவிலில் அலர்மேலுமங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X