நல்லவாடு மீனவர்களிடம் 29 வீச்சரிவாள் பறிமுதல் | செய்திகள் | Dinamalar
நல்லவாடு மீனவர்களிடம் 29 வீச்சரிவாள் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
05:28

அரியாங்குப்பம் : மோட்டார் பைக்கில் எடுத்துச் சென்ற 29 வீச்சரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்து, ஆறு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



சுருக்கு வலையை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக நல்லவாடு - வீராம்பட்டிணம் மீனவர்கள், கடந்த ஆக., 28ம் தேதி புதுக்குப்பம் கடற்கரையில் மோதிக் கொண்டனர். இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.போலீசார் நேற்று நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு அருகே வாகன தணிக்கை நடத்தினர்.



மோட்டார் பைக்கில் சென்ற இருவரை சோதனை செய்ததில், 29 வீச்சரிவாள் எடுத்துச் செல்வது தெரிந்தது.விசாரணையில், நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மீனவர்கள் மோதலின்போது, கொம்பாக்கத்தில் உள்ள பட்டறையில் ஆர்டர் கொடுத்த வீச்சரிவாள்களை தற்போது வாங்கிச் செல்வது தெரியவந்தது.வீச்சரிவாள்களை பறிமுதல் செய்து, கொம்பாக்கத்தை சேர்ந்த 4 பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X